- ஜெயபாரதி மதிவாணன்
குளத்தின் கரையில் அமைதியாக அமர்ந்து பாருங்கள்! நீரின் மேற்பரப்பில் கண்களைப் பதித்தபடி அமர்ந்திருக்கும் மீன்கொத்திப் பறவை, திடீரென்று தண்ணீருக்குள் பாய்ந்து மீனைப் பிடித்துக்கொண்டு மேலே எழும். அந்த அழகான காட்சியைக் காணும்போது உலகையே மறந்துவிடுவோம். இயற்கை நமக்கு வழங்கும் இனிமையான காட்சிகளில் இதுவும் ஒன்று!
ஆனால், இதே காட்சியை ஒரு பயங்கரமான போர்க்களத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
போர்க்களம்! எங்கும் வீரர்களின் மரண ஓலங்கள்! கத்தி, வேல், அம்பு ஆகியவற்றால் கை, கால், மார்பு என உடலின் பல பகுதிகளில் காயமடைந்த வீரர்கள், இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்கள். அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது.
அப்படிப்பட்ட போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களின் புண்களைத் தைக்கும் ஊசி எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?
மீன்கொத்திப் பறவை மீனைப் பிடிப்பதற்காகத் தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி மேலே எழுவதைப் போல, புண்களைத் தைக்கும் ஊசியும் காயம்பட்ட உடலில் ஊடுருவி ஊடுருவி வெளிவருகிறது!

என்ன ஓர் உவமை! ஒருபுறம், குளத்தில் மீன் பிடிக்கும் பறவையின் அழகான செயல்; மறுபுறம், போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களின் புண்களைத் தைக்கும் கொடுமையான காட்சி!
இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, இயற்கைக் காட்சியுடன் போர்க்கள நிகழ்வையும் இணைத்துக் காட்டுகிறார் சங்கப் புலவர் பரணர். அவரது கற்பனைத் திறனும், கூர்ந்து கவனிக்கும் நுண்ணறிவும் வியக்க வைக்கின்றன!
சங்க இலக்கியம் ஒரு பெரிய கடல். அதில் மூழ்கி, காலத்தால் அழியாத இலக்கிய முத்துக்களைத் தேடி எடுக்கலாம். வாருங்கள், நாமும் அக் கடலில் மூழ்கி முத்தெடுப்போம்!
(நான் ஜெயபாரதி மதிவாணன் விருதுநகர். கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரில் பிறந்து வாழ்வதில் பெருமையடைகிறேன். இல்லத்தரசி. 2000லிருந்து கொரானா வந்த 2019 வரை 10 நாட்களுக்கு ஒருமுறை நூலகத்திற்குச் சென்று சங்க இலக்கியங்களை எடுத்து வந்து ரசித்துப் படிப்பேன். 2016, 17, 18, ஆகிய மூன்று ஆண்டுகளில் இலக்கிய மன்றம் வீட்டிலேயே வைத்து நடத்தினேன். வருடத்திற்கு மூன்று முறை நடனம், நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தினேன். வீட்டில் இருமுறை மிகப் பழைய பொருட்களைக் காட்சிப்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தேன். 35 பேர் வந்து பார்த்து ரசித்தார்கள். தாங்களும் பழைய பொருட்களைப் பத்திரமாக வைக்கப் போவதாக உற்சாகமாகக் கூறினார்கள். புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பழமை - புதுமை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறேன்)
அவளுக்கென்று ஓர் ஆசை!
Short Story: நம்பிக்கையே நிம்மதி!
மீன்கொத்திப் பறவை!
அது போதும் எனக்கு!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
இட்லிக்கடை.. ஒரு நிமிடக் கதை (36)
{{comments.comment}}