மும்பை: மேகலாயாவில் தேனிலவுக்குப் போன இடத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலதிபர் ரகுவன்ஷி கொலைச் சம்பவம் திரைப்படமாகவுள்ளது.
மேகாலயாவில் தேனிலவு சென்ற இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம், பாதிக்கப்பட்டவர், குற்றவாளிகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காரணம், இந்தக் கொலையைத் திட்டமிட்டு செய்தது அவரது மனைவிதான். அதுவும் கல்யாணமான சில நாட்களிலேயே இந்தக் கொடூர முடிவை சந்தித்தார் ரகுவன்ஷி.
இப்போது, ராஜா ரகுவன்ஷியின் கதையை திரைப்படமாக எடுக்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். 2025 மே மாதம் நடந்த இந்தக் கொலையை மையமாக வைத்து "ஹனிமூன் இன் ஷில்லாங்" என்ற திரைப்படம் உருவாகிறது. இதில் ராஜா ரகுவன்ஷியின் மனைவி சோனம் ராஜ்வன்ஷி மற்றும் அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா ஆகியோரின் கைது வரையிலான சம்பவங்கள் இடம்பெற உள்ளன.
ராஜா ரகுவன்ஷியின் சகோதரர் சச்சின், திரைப்படத்திற்கு அனுமதி அளித்துள்ளார். "என் சகோதரனின் கொலை கதையை பெரிய திரையில் கொண்டு வராவிட்டால், யார் சரி, யார் தவறு என்று மக்களுக்குத் தெரியாது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கூறினார். மற்றொரு சகோதரர் விபின், மேகாலயாவின் உண்மையான முகத்தை திரைப்படத்தில் காட்ட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இப்படத்தை எஸ்.பி.நிம்பாவத் இயக்கவுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறுகையில், இதுபோன்ற துரோக சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதை எங்கள் படத்தின் மூலம் மக்களுக்கு சொல்ல விரும்புகிறோம் என்றார். படத்தின் 80% படப்பிடிப்பு இந்தூரிலும், மீதமுள்ள 20% மேகாலயாவிலும் நடைபெறும்.
ராஜா ரகுவன்ஷிக்கும், சோனமுக்கும் மே 11ம் தேதி கல்யாணம் நடந்தது. அதன் பிறகு மனைவி சோனம் ரகுவன்ஷியுடன் மேகலயாவுக்கு தேனிலவுக்குப் போயிருந்தார். அங்கு வைத்து சோனமின் காதலன் ராஜ் குஷ்வாஹா ரகுவன்ஷியைத் தீர்த்துக் கட்டினார். பின்னர் அவரும் சோனமும் தலைமறைவாகி விட்டனர். கொலைச் சம்பவம் மே 23 அன்று நடந்தது. சோனம் மற்றும் ராஜ் குஷ்வாஹா உட்பட எட்டு பேர் மீது குற்றச் சதி, கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}