கலிபோர்னியா: உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா நிறுவனம் தற்போது இன்ஸ்டாகிராமில் இருப்பதைப் போன்றே ஸ்டோரியை ரீஷேர் செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப்பிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம், whatsapp, பேஸ்புக், மற்றும் திரட்ஸ் போன்ற பல்வேறு இணைய தள சேவைகளை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. மெட்டாவின் திரெட்ஸ் அறிமுகமானபோது பெரும் அலையை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கில் டவுன்லோட் செய்யப்பட்டது அந்த ஆப். ஆனால் பின்னர் அது மவுசு இழந்து போனது. இந்த நிலையில் வாட்ஸ்ஆப்பில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது மெட்டா.
சமீபத்தில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைக்கும் வீடியோ அளவை 30 விநாடிகளிலிருந்து 1 நிமிடமாக அதிகரித்தது வாட்ஸ் ஆப். மேலும் வாட்ஸ்ஆப் ஸ்டேடட்டஸை லைக் செய்யும் அம்சத்தையும் அது அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இருப்பதைப் போல ஸ்டோரியை ரீஷேர் செய்யும் அம்சத்தை வாட்ஸ் ஆப்பிலும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது மெட்டா நிறுவனம்.
சமீபத்தில் பேஸ்புக் நிறுவனரும் மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கபர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 343 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர் பட்டியல் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}