21,000 வேலையை விட்டு நீக்கிய.. மார்க் சக்கர்ப்ர்க்கின் சொத்து மதிப்பு.. 10.2 பில்லியன் டாலர் உயர்வு!

Apr 29, 2023,11:17 AM IST

டெல்லி: மெட்டா (பேஸ்புக்) நிறுவனர் மற்றும் சிஇஓ வான மார்க் சக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 10.2 பில்லியன் டாலர் உயர்ந்து, தற்போது 87.3 பில்லியன் டாலராக மாறியுள்ளது. உலகின் 12வது பணக்காரராக அவர் ப்ளூம்பர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

சமீப மாதங்களில் மெட்டா நிறுவனம் மிகப் பெரிய அளவில் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வந்தது. இதுவரை 21,000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் மெட்டாவின் பங்கு மதிப்பு 14 சதவீதம் வரை உயர்ந்தது. இதன் காரணமாக மார்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.



மெட்டா நிறுவனம் கடந்த காலாண்டில் 28.65 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த கடந்த மார்ச் காலாண்டை விட 3 சதவீதம் அதிகமாகும்.  நஷ்டத்தில் ஓடி வந்த மெட்டா இப்படி வருவாய் ஈட்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டு பங்கு மதிப்புசரிவு காரணமாக ஒரே நாளில் தனது சொத்து மதிப்பில் 71 பில்லியன் டாலரை இழந்தார் சக்கர்பர்க். தற்போது விட்டதைப் பிடிக்க ஆரம்பமித்துள்ளார். 

மெட்டா நிறுவனம் மீண்டும் பாசிட்டிவான பாதைக்குத் திரும்பியிருப்பது குறித்து சக்கர்பர்க் கூறுகையில், கடந்த காலாண்டு நல்லதாக முடிந்துள்ளது. தொடர்ந்து நாம் வளர்ந்து வருகிறோம். நமது "ஏஐ" தொழில்நுட்பம் நல்ல முடிவைக் கொடுத்துள்ளது.  நாம் சிறப்பாக செயல்படுவதால், நமது தயாரிப்புகளும் மேலும் சிறப்படையும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்