சென்னை: நாளை மறுநாள் உருவாகும் மோன்தா புயலால் தமிழக கடலோரம் மற்றும் ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதற்கு முன்னர் ஒரு புயல் உருவாகி அது வலுவிழந்தது. தற்போது மோன்தா புயல் உருவாகி அது வலு பெற்றுள்ளது. இந்த புயலால் தமிழக கடலோரம் மற்றும் ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அக்டாபர் 27 ஆம் தேதி (நாளை மறுநாள்) வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று நிலவுகிறது. அது மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும், அதனையடுத்து அது 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) புயலாகவும் வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை, இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யலாம்.
மோன்தா புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, சற்று முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 27 ஆம் தேதி புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வரும் 27 ஆம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 28 ஆம் தேதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ஆஸ்திரேலியாவை அதிர வைத்த பாகிஸ்தானி அப்பா மகன்.. 16 பேரின் உயிரைப் பறித்த கொடுமை
{{comments.comment}}