சென்னை மெட்ரோவில் சூப்பர் வேலை வெயிட்டிங்.. தேர்வு கிடையாது.. நேர்காணல் மட்டுமே.. விண்ணப்பிங்க

Jun 29, 2024,11:11 AM IST

சென்னை:   சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் எடுக்கப்படவுள்ளனர்.


தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர், துணைத் தலைமைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப ஜூலை 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலமாகவே இப்பணிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.


அனைத்துப் பணிகளுக்கும் பிஇ அல்லது பிடெக் படிப்பு ஏதாவது ஒன்றைப் படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் அனுபவம் வித்தியாசப்படும், வயது வரம்பும் வித்தியாசப்படும். ஒரே ஒரு தலைமைப் பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு வயது வரம்பு அதிகபட்சம் 55 ஆக இருக்க வேண்டும். ரயில்வே அல்லது மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.  குறைந்தது 25 வருட கால அனுபவம் இருக்க வேண்டும்.




பொது மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு குறைந்தபட்சம் 20 வருட கால அனுபவம் இருக்க வேண்டும். பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 45 ஆகும்.


மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க பி.இ, பி,டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க  38-க்குள் வயதுக்குள் இருக்க வேண்டும்.


துணை மேலாளர் பதவிக்கு 35 வயதும், உதவி மேலாளர் பணிக்கு 30 வயதும் உச்சவரம்பமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளுக்கும் பிஇ அல்லது பிடெக் படிப்பு அவசியமாகும்.


தேர்வு முறை:


தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர், துணைத் தலைமைப் பொது மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் ஆகிய அனைத்துப் பணிகளுக்கும் எழுத்துத் தேர்வு கிடையாது. தகுதியுடையவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப் படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்:


இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.  விண்ணப்பதாரர்கள்  https://chennaimetrorail.org/job-notifications/ இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க ஜூலை 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்