சென்னை: நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிலாடி நபி பண்டிகையை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த தலைவர்களும் மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முகம்மது நபிகள் நாயகம்,இஸ்லாமிய நாட்காட்டியின் ரபி உல் அவல் மாதம் எனப்படும் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் பிறந்தவர். அப்போது நபிகள் நாயகம் கடைபிடித்த ஒழுக்க நெறிகளின் வழிகளிலேயே மற்றவர்களும் வாழ வேண்டும் அறிவுறுத்தி வந்தவர்.அன்னாரின் வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்கவும், அவரை நினைவு கூறவும் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடி நபியாக கொண்டாடுகிறோம்.
அதாவது ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் மிலாடி நபி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வரிசையில் இன்று தமிழ்நாடு முழுவதும் மிலாடி நபி பண்டிகையை இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையை மிலாத்-உன்-நபி, மீலாதுன் நபி எனவும் வேறு பெயர்களால் அழைப்பதுண்டு. இந்த நாளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வழிபாடு செய்வர்.
ரம்ஜான், பக்ரீத் போன்றவை புனிதமான மாதமாக அனுசரிக்கப்படுவதை போன்றே மிலாடி நபியும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் செழிப்பும் எப்போதும் நிலவட்டும் எனக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் மிலாடி நபியாகக் கொண்டாடப்படும் முகமது நபியின் பிறந்தநாளில், நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்மு தெரிவித்துள்ளார்.
மத நல்லிணக்கம் சமத்துவம் தழைக்க அனைவரும் இந்நாளில் உறுதிமொழி ஏற்போம் என முதல்வர் மு க ஸ்டாலின் மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தவிர அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களும் இஸ்லாமியர்களுக்கு மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}