ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லாவில் இன்று காலை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை, நிலச்சரிவு, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உரைந்துள்ளனர். ஒரு பக்கம் கனமழை மற்றொரு பக்கம் நிலநடுக்கம் என ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் எப்பொழுது எது நடக்கும் என்று தெரியாமல் இருந்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்ல பகுதியில் அடுத்தடுத்து இன்று காலை 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. 7 நிமிட இடையில் வேளையில் இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளது. பாரமுல்லா பகுதியில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.4.8 ரிக்டர் அளவில் பதிவான 2வது நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வு ஏற்பட்டத்தில் வீடுகள் அதிர்ந்ததால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தற்போது மக்கள் ரோடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்து ஏதும் நில அதிர்வு ஏற்பட்டால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}