சென்னை: லியோ திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
லியோ விவகாரம் திரையுலகை சுழற்றியடித்து வருகிறது. வேறு யாருடைய படத்துக்கும் கொடுக்காத அளவுக்கு லியோ படத்துக்கு சிக்கல்கள் வருவதாக பலரும் கருத ஆரம்பித்துள்ளனர். ஒரு சினிமா காட்சிக்காக கோர்ட் வரை சென்ற முதல் படம் லியோதான். அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி கோர்ட்டுக்குப் போனது லியோ படக் குழு.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதியிடம் லியோ விவகாரம் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை, திரையுலகம் எங்கள் நட்பு உலகம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் 4 மணி காட்சியுடன் சேர்த்து 6 காட்சிகளுக்கு அனுமதி தரப்படும்.
இன்றைக்கு திரையுலகம் செழிப்பாக இருப்பதற்கு திமுக அரசே காரணம், திரைத்துறையை முடக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை, சிறிய தயாரிப்பாளர்களை கூட இந்த அரசு ஊக்குவிக்கிறது. சினிமாவிற்கு தடை போட்டு திரையுலக விரோதப் போக்கை நாங்கள் மேற்கொள்ள மாட்டோம். நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
லியோ படத்திற்கு நாளொன்று 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் திரைத்துறைச் செழிப்பாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்றார் அமைச்சர் ரகுபதி.
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
காடும் மலையும் வயலும் பேசிக் கொண்டால்.. இயற்கையின் அமைதியான உரையாடல்!
கண்ணு வலிக்குதா.. தலைவலியா இருக்கா.. அட இதுக்கு எதுக்கு கவலை.. பாட்டி வைத்தியம் இருக்கே!
என்னுள் எழுந்த (தீ)!
144 வயதைத் தொட்ட மகாகவி.. காலம் உள்ளவரை நீளும் பாரதியின் தீ வரிகள்!
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!
ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!
{{comments.comment}}