சென்னை: தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியத்தை 12,500லிருத்து 15,000 மாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சில ஆண்டுகளாகவே தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடுவதற்காக எழும்பூர் காந்தி இர்வின் சாலைக்கு வெவ்வேறு பகுதிகளில் இருந்து தனித்தனி குழுக்களாக ஆசிரியர்கள் வந்தனர். அவர்களை அங்கு இருந்த போலீசார் கைது செய்தனர். பல ஆசிரியர்கள் பஸ்சில் ஏற மறுத்து, சாலை ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி பஸ்சில் ஏற்றி மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில்ஆசிரியர்கள் போராட்டத்திற்கு முடிவு எட்டப்பட்டது.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், பொங்கல் தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதல் அமைச்சர் தெரிவித்தார். பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12, 500-ல் இருந்து ரூ.15, 000 ஆக உயர்த்தப்படும். மேலும், கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படாத மே மாத ஊதியம் ரூ.10,000 வழங்கப்படும். மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமல் செய்திருப்போம். ஆசிரியர்களின் நலனைப் பேணுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
பூவரசு இலை பூரணக் கொழுக்கட்டை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 2)
ஒரே தூக்கு.. இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் அசத்திய அகஸ்தீஸ்வரம் ஆசிரியர்!
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
மார்கழித் திங்கள் மடிந்த பொழுதில்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
மாட்டுப் பொங்கலும் மாடுபிடி விளையாட்டும்!
{{comments.comment}}