சென்னை: திமுக கூட்டணியில் பிளவு வந்து விடாதா என்று பலரும் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு இடமில்லை. திருமாவளவன் மிகப்பெரிய தலைவர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஆரம்பித்த நடிகர் விஜய் திமுகவை தான் எதிர்க்கப்போவதாக விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் தெரிவித்தார். அதனை அடுத்து நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் 2வது முறையாக அவர் அரசியல் பேசினார்.

அப்போது, மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளமாக முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.. நீங்க உங்களோட சுயநலத்துக்காக எல்லா வழிகளிலும் பாதுகாத்து வரும் உங்களது கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளன் அவர்கள் அவங்களால இன்னிக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எத்தனை பிரஷர் இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தாலும் நான் இப்ப சொல்றேன்.. அவருடைய மனசு முழுக்க முழுக்க இங்க நம்மளோடதான் இருக்கும் என்று பேசினார் விஜய்.
இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான திமுக அமைச்சர்கள் விஜய் பேசியதற்கு பதில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் பேசியது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், திமுக கூட்டணியில் பிளவு வந்து விடாதா என்று பலரும் காத்திருக்கின்றனர். அதற்கு இடமில்லை. திருமாவளவன் மிகப்பெரிய தலைவர். சுயமரியாதைக்காரர். அப்படியெல்லாம் அழுத்தம் கொடுத்து அவரை வேலை செய்ய வைக்க முடியாது. அவரை மதிக்கக்கூடியவர்களாக தான் நாங்கள் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 4 மணிநேரம் விசாரணை
பாஜகவால் மட்டுமே கேரளாவில் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
இலக்குகளை அடைவதற்கான உந்துசக்தி... Motivation!
2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்
வெற்றி என்பது எது தெரியுமா?.. Success is when others copying you
{{comments.comment}}