திடீர் உடல் நலக்குறைவு.. அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

Jul 13, 2024,03:44 PM IST
சென்னை: அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் அவர் அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியினை திமுக கட்சியினர்களும், தொண்டர்களும் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். முதல்வரும் அண்ணா அறிவாலயத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.





இந்த நிலையில் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு வந்த அவருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

அதிகம் பார்க்கும் செய்திகள்