சென்னை: பாஜகவோடு கள்ளக்கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபத்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி என்றால் பயம், உள்துறை அமைச்சர் அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத்துறை பயம், சிபிஐ பயம் என அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு கண்டனம் என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் வலியுறுத்துதல் என்றும் சொல்லி பாஜக பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித் ஷா என்றால் பயம், அமலாக்கத்துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித்துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய் விடுமோ என்று பயம் இப்படி எடப்பாடி பழனிசாமியின் பயப்பட்டியலில் எல்லாம் பயம் மயம் எனச் சீனப் பெருஞ்சுவர் போல் நீள்கிறது.
- குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்த மசோதா மாநிலங்களவையில் தோல்வி அடைந்திருக்கும்.
- நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்த மசோதாவிற்கு அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரவளித்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மறைமுக ஆதரவு.
- ஜெயலலிதா எதிர்த்த தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்,உதய் மின் திட்டத்திற்கெல்லாம் மோடிக்கு பயந்து ஆதரவு.
* முத்தலாக் தடைச் சட்டத்திற்கு மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என அதிமுக இரட்டை வேடம் போட்டது.
- முஸ்லிம்களை அவதூறாகப் பேசிய அமலாக்க அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை 2024ல் மாநிலங்களவையில் கொண்டு வர ஆதரித்து கையெழுத்திட மறுத்தது.
- நாடு விடுதலை அடைந்த நாளிலிருந்து வழிகாட்டுத் தலங்களை வேறு மதங்களுக்கு மாற்ற முடியாது எனும் மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக பாஜக நடவடிக்கை மேற்கொண்டு இருக்கும் நிலையில், கருத்து தெரிவிக்காமல் அதிமுக பதுங்கியது.
- நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டே மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை பலமாக ஆதரித்தது. இது மட்டுமின்றி அவற்றை எதிர்த்தவர்களையும் கடுமையாக விமர்சித்த விஷ வாயு நீங்கள்.
- மாநிலங்களின் சுய ஆட்சிக்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவையும் ஆதரிக்கும் பாஜகவின் உன்னத தோழன் அதிமுக.
இப்படி மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் ரெய்டுக்கு பயந்து ஆதரித்த கோழை தான் எடப்பாடி பழனிச்சாமி. இவர்தான் அதிமுக பொதுக்குழுவின் வீரவேசமாக பேசுவது போல், காற்றோடு கத்தி சண்டை போடுகிறார். பெட்ரோல் விலை உயர்வு கேஸ் விலை உயர்வு என என்றைக்காவது கண்டித்து பழனிச்சாமி அறிக்கை விட்டு இருக்கிறாரா? அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026 அதிமுக மீண்டும் அரியணை ஏறும் என்றெல்லாம் பொதுக்குழுவில் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார். கோழைக்கு ஆசை என்ன? என்று தான் கேட்கத் தோன்றுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
{{comments.comment}}