டெல்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 34 தலித் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் சரி, ராகுல் காந்தியும் சரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் . முருகன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக டெல்லியில் ஏஎன்ஐ செய்தியாளரிடம் எல். முருகன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கிட்டத்தட்ட 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 34 பேர் தலித்துகள். ஆனால் அரசியல் சாசனம் குறித்து வாய் கிழியப் பேசும் மல்லிகார்ஜூன கார்கேவோ அல்லது ராகுல் காந்தியோ அல்லது இந்தியா கூட்டணியின் பிற தலைவர்களோ எதுவுமே பேசாமல் மெளனமாக உள்ளனர்.
யாருமே வாய் திறக்கவில்லை. இந்தியா கூட்டணியின் இந்த அமைதிப் போக்கு கண்டனத்துக்குரியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சிக்குப் போகவில்லை. சம்பவம் நடந்து 3 நாட்களாகி விட்டது. இன்னும் போகாமல் இருக்கிறார். அவர் அங்கு போக வேண்டும்.
இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருவது நியாயமானது. சிபிஐ விசாரித்தால்தான் உண்மை நிலை என்னவென்று தெரிய வரும் என்று கூறினார் எல். முருகன்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}