சென்னை: வாக்கிங்கில் பலருக்கும் பேராசனாக மாறி வருகிறார் நம்ம சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம்.
Health awareness இன்று மக்களிடையே அதிகமாகி வருகிறது. இதற்குக் காரணம், வகை வகையாக சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொண்டு விட்டு பிறகு உடம்பைக் குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளிட்டவற்றை கட்டுக்குள் வைக்கவும்தான் பலர் வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை நாடுகிறார்கள் என்றாலும் கூட பலருக்கு அதெல்லாம் வராமல் தடுக்கும் விழிப்புணர்வு கூடியுள்ளதும் கூட ஒரு காரணமாகும்.
நம்மை நேசிக்க வேண்டும்..அதை விட நமது உடம்பை ரசிக்க வேண்டும். சுவர் இருந்தால்தானே சித்திரம்.. நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தால்தானே எல்லாமே சாத்தியம் என்ற விழிப்புணர்வும் மக்களிடையே இன்று அதிகரித்துள்ளது. இதுவும் கூட அவர்கள் வாக்கிங், ஜாகிங், ஜிம்முக்குப் போவது என்று கிளம்பி விட்டன. அந்த வகையில் இந்தக் காலத்துக்காரர்களை சற்று பாராட்டலாம்.
பலருக்கும் வாக்கிங், ஜாகிங்கில் ஒரு உதாரண புருஷராக இருப்பவர்தான் நம்ம மா.சுப்ரமணியம். இவரைப் போல விடாமல் ஜாகிங், வாக்கிங் போவோர் வெகு அரிதுதான். பலர் இருப்பார்கள்.. ஆனால் இவர் பலருக்கு முன்னோடியாக இருக்கிறார். எந்த ஊரில் இருந்தாலும் சரி... ஓடி விடுவார்.. அதாவது ஜாகிங் போய் விடுவார். வாக்கிங், ஜாகிங் இல்லாமல் இவரது ஒரு நாளும் முடிவடையாது.
இந்த நிலையில் ஒரு வித்தியாசமான வீடியோவைப் போட்டுள்ளார் மா.சுப்ரமணியம். அதாவது பின்னோக்கி நடக்கிறார். அதுவும் சற்று வேகமாக. இது நமது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பார்கள். அதாவது குறுகிய நேரத்தில் அதிக அளவிலான கலோரிகளை இது குறைக்கும். வழக்கமாக முன்னோக்கி நடக்கும்போது உடல் உழைப்பு என்பது குறைவாக இருக்கும். ஆனால் பின்னோக்கிப் போகும்போது நிறைய எனர்ஜி தேவைப்படும்.. எனவே அதிக அளவிலான கலோரிகள் வேகமாக குறையும். எனவே அது கூடுதல் பலனையும் கொடுக்கும்.
இந்த வீடியோவைப் போட்டுள்ள அமைச்சர் மா.சுப்ரமணியம், வாழ்க்கையில் முன்னோக்கிதான் போகணும்.. ஆனால் வாக்கிங்கில் பின்னோக்கியும் போகலாம் என்று ஜாலியாக எழுதியுள்ளார்.. சூப்பர்ல!
அப்புறம் முக்கியமான விஷயம்.. பின்னோக்கி நடக்கும்போது நன்கு பிராக்டிஸ் செய்து கொண்டு செய்யுங்கள்.. நீங்கள் செல்லும் சாலை அல்லது டிராக் சீராக இருக்க வேண்டியது அவசியம். வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையில் இதைச் செய்யாதீர்கள். தனியாகவும் இதைச் செய்யாதீர்கள். உடன் ஒருவர் இருப்பது நல்லது. பின்னோக்கி நடக்கும்போது கால்கள் தடுமாறச் செய்யும்.. எனவே முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டு, துணைக்கு ஒருவரை வைத்துக் கொண்டு, சரியான இடத்தில் இதைச் செய்வது நல்லது.
Happy exercising மக்களே!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}