சென்னை: கோவிஷீல்ட் குறித்து தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேடு பகுதியில் மக்களுக்காக நீர் மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோவிஷீல்ட் பக்கவிளைவுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், கோவிஷீல்ட் மட்டுமல்லாமல் அனைத்துத் தடுப்பூசிகள் குறித்தும் மக்கள் அச்சத்தோடேயே வாழும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் கோவிஷீல்ட் தொடர்பான தீவிர பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை, அப்படி தகவல் இல்லை.
பொதுவாகவே எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதைப் போட்டுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே பின்விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பெரிய அளவில் இங்கு இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பாதுகாத்துக் கொண்டாலே போதுமானது.
தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும், காலையில் நடக்க வேண்டும். நல்ல சத்துள்ள ஆகாரம் உட்கொள்ள வேண்டும். அப்படி செய்து வந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம் என்றார் மா.சுப்பிரமணியன்.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் என இரு தடுப்பூசிகள் போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}