உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியுள்ளனர்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு புகார்

Dec 03, 2024,05:49 PM IST

சென்னை: உண்மையிலேயே எதிர்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று தர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி வாய்ச்சவடால் விடாமல் மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி தரட்டும். உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடிமீது சேற்றை வீசி இருக்கிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: 


சென்னையில் கடந்த காலங்களில் 13 சென்டிமீட்டர் மழைக்கே மூன்று நாட்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில் தற்போது மழை பெய்த 12 மணி நேரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதற்கு, தமிழக முதலமைச்சரின் போர்க்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஃபெஞ்சல் புயல் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




தமிழக அரசு மீது எதிர் கட்சிகள் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு கொடுத்து படிப்படியாக தான் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து முன்கூட்டிய தண்ணீர் திறக்கப்பட்டதால்  பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் மனசாட்சியோடு பேச வேண்டும்.


உண்மையிலேயே எதிர்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று தர வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி வாய்ச்சவடால் விடாமல் மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி தரட்டும். உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடிமீது சேற்றை வீசி இருக்கிறார்கள். அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். புயலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் அளவிட முடியாத சூழல் இருந்தது.


புயல் போக்கு காட்டியது என்பது உண்மை தான். புயலின் தாக்கத்தை வானிலை மையமே கணிக்க முடியாமல் தான் இருந்துள்ளது. எனினும் அரசு தயார் நிலையில் இருந்ததால் தான் பெரிய உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேதம் இருந்ததால் இரண்டு நாட்கள் சரி செய்யப்படும். திருவண்ணாமலையில்  பக்தர்களின் வருகைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்படும். 40 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிகரமாக தீபத்திருவிழாவை நடத்துவோம். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து வருங்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

news

கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?

news

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்