கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி... சாத்தான்குளம் சம்பவமே சாட்சி... அமைச்சர் சேகர்பாபு!

May 20, 2025,06:49 PM IST
சென்னை: கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி. அதற்கு சாத்தான்குளம் சம்பவமே சாட்சி என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பெள்ளாச்சி சம்பவம் குறித்து ஒரு அறிக்கை வெயிட்டிருந்தார். அந்த அறிக்கையில்,  பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று மேடைதோறும் கூவிய முக ஸ்டாலின் அவர்களே- உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி தானே? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், துப்பு கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியை சாட்சி என்று சொல்லி இருக்கிறோம். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்றும் சொல்லி இருக்கிறோம். ஆட்சியைப் பொருத்தவரை தவறு நடக்கும் போது அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் குற்றம் சாட்ட வேண்டும்.



 முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. தவறு யார் இழைத்திருந்தாலும், சொந்த கட்சிக்காரரே தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாடு. இது நீதியின் சாட்சி. சட்டத்தின் ஆட்சி. கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி, அதற்கு சாத்தான் குளம் சம்பவமே சாட்சி என்று பதில் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் சேகர்பாபு ஆகிய 3வருக்கும் இடையில், தற்போது வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இது பொதுமக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

news

2 மனைவி.. வாரத்துல ஆளுக்கு 3 நாள்... ஞாயிற்றுக்கிழமை லீவு.. டைம்டேபிள் எப்பூடி!

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

சென்னையில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில்.. பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது

news

50 சட்டசபைத் தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்கள்.. அண்ணாமலைக்கு எத்தனை?

news

ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்