டெல்லி: சட்ட விரோத பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி, பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குப் பின்னர் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உடல் நிலை காரணம் காட்டி அடுத்தடுத்து ஐந்து முறை ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு செய்தார். ஆனால் ஐந்து முறையும் அது நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த மனு மீது பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த பதில் மனுவை நேற்றுதான் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. இன்று நீதிபதி அபய் ஓஹா தலைமையிலான அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தபோது, இதை செந்தில் பாலாஜி தரப்பு சுட்டிக் காட்டி, வழக்கு விசாரணையை வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறது அமலாக்கத்துறை என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து பதில் மனு தாமதத்திற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. மேலும், செந்தில் பாலாஜி விசாரணையின் போது முறையாக ஒத்துழைக்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதாலும், இவரை விடுவித்தால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதாலும் இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கதுறையின் சார்பில் வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மே 6ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
{{comments.comment}}