சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக கடந்த 8 மாதங்களாக நீடித்து வந்த செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவே இல்லை.

அவரை அமைச்சர் பதவியிலிருந்து ஆளுநர் ஆர். என்.ரவி அதிரடியாக நீக்கி நாட்டையே அதிர வைத்தார். ஆனால் அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதால் தனது முடிவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார்.
கடந்த 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த செந்தில் பாலாஜி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்படுவதாலும், இலாகா இல்லாத அமைச்சராக நீண்டகாலமாக நீடித்தால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும் இதை வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரச்சினை செய்து விடக் கூடாது என்பதாலும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதை விட முக்கியமாக, அமைச்சர் பதவியில் நீடிக்கும் வரை ஜாமீன் கிடைக்காது என்று சட்ட நிபுணர்கள் அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. பதவியில் இருக்கும்போது ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டதால்தான் அவர் ராஜினாமா முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்கள். மேலும் தேர்தல் நேரத்தில் செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால், கொங்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளை அவர் நேரில் முடுக்கி விட வாய்ப்பு இருக்கும் என்பதும் இன்னொரு காரணமாக கூறப்படுகிறது. அது கொங்கு மண்டல திமுகவினருக்கு மாரல் சப்போர்ட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}