சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல்நிலை சீரானதும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் நேற்று காலை உடல்நிலை பாதிக்கப்ட்டது. சிறையில் அவர் கீழே விழுந்து விட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து புழல்சிறை காவலர்கள் அவரது நிலையை பார்த்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் செந்தில் பாலாஜிக்கு ரத்த ஓட்டம் சரியில்லாமல் இருப்பதை கால் மரத்துப்போய் உள்ளதாக கூறினர். ரத்த ஓட்டம் சரியாவதற்கான சிகிச்சைகளை வழங்கி பல டெஸ்டுகள் அவருக்கு எடுக்கப்பட்டது.
அனைத்து பரிசோதனைகளும் முடிவடைந்த பின்னர் நேற்று மாலை அவரை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டார். இவரது வழக்கு வருகின்ற அக்டோபர் 31ம் தேதி மறு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}