பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக: அமைச்சர் சேகர்பாபு

Jun 23, 2025,12:38 PM IST
சென்னை: பாஜகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது அதிமுக. அதிமுக எப்படி தன்னை அடிமைப்படுத்திக் கொள்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று முருகன் மாநாடு இந்து முன்னணி சார்பில்  நடந்தது. இந்த மாநாட்டில் அதிமுக கட்சியை சேர்ந்த முக்கிய பிமுகர்கள் கலந்து கொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அதிமுக எப்படி தன்னை அடிமைப்படுத்திக் கொண்டுள்ளது  என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். இந்த மாநாட்டு மேடையில் பேசியவர்கள் பெரியாரையும் அண்ணாவையும், முன்னால் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவையும் வசை பாடியவர்கள். அவர்கள் அழைக்கின்ற ஒரு மேடையில் இவர்கள் போய் அமர்கிறார்கள் என்றால் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள் என்று தான் அர்த்தம். 



திராவிடத்தே அழிப்போம் என சூளுரைக்கும் எச். ராஜா அந்த மேடையில் தான் இருக்கிறார். திராவிடம் இனி தமிழகத்தில் கோலோச்ச முடியாது என அழுத்தம் திருத்தமாக சொன்ன அண்ணாமலையும் அந்த மேடையில் தான் இருக்கிறார்.  அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்பது எங்கள் முதல்வரின் நிலைப்பாடு. அதில் என்றைக்கும் உறுதியாக இருப்போம். நேற்று நடந்த கூட்டம் ஒருநாள் கூத்து, அது நேற்றோடு முடிந்து விட்டது.
 
தமிழ்நாட்டில் 71,000 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிட்டு வெல்லட்டும், அதன்பின் பேசட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை இடையே போட்டி நிலவுகிறது. நயினார் நாகேந்திரன் பச்சைத்துண்டுடனும், அண்ணாமலை காவி துண்டுடனும் சுற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

news

Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

news

எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??

news

திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

news

மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு

news

ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்