சென்னை: அண்ணா ஹசாரே போல ஒரு ஆண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா களத்துக்கு விஜய் சென்றார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஓட்டேரியில் மக்களைத் தேடி பயணம் திட்டத்தின் மூலம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வட சென்னை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் படி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கிறது. திருச்செந்தூர் தண்டாயுதபாணி முருகன் கோவில் ரூ.400 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

40 தொகுதிகளிலும் நின்று வென்று காட்டியவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நம் முதல்வர். 2026ல் மக்கள் சம்மட்டி அடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இது திராவிட மண். இனத்தால், மொழியால், மதத்தால் பிளவுகள் ஏற்படுத்தி குளிர்காய்கிறவர்களுக்கு இரும்பு நாயகனாக இருக்கிறார் எங்கள் நாயகன். எங்கள் முதல்வர் இருக்கின்ற வரையில் இது போன்ற பொய்ப்பிரச்சாரங்கள் எடுபடாது.
அன்னா ஹசாரே மாதிரி ஒரு ஆண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா களத்துக்கு விஜய் சென்றார். நேற்றைய நிகழ்வு நேற்றோடு முடிந்து விட்டது. ஆனால், நாங்கள் சூரியன் உதிக்கும் முன் மக்கள் பணிக்கு வந்துள்ளோம் இரவு வரை இதனை மேற்கொள்கிறோம். இது தான் திமுகவின் நிலை என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}