பழனி: பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி மூன்று நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம் செய்யலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனியில் வருடம் தோறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த வருடம் தைப்பூச திருவிழாவிற்காக வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இத்திருவிழா நடைபெற இருக்கிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள். தற்போது தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே தினந்தோரும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை ஆக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூச தேரோட்டம் நடைபெறும் போது முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் பெரிய தேரிலும், விநாயகர் சண்டிகேஸ்வரர் சிறிய தேரிலும் வளம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ம் தேதி நடைபெற உள்ளது. தை பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் தைப்பூச தினம், அதற்கு முந்தைய நாள் மற்றும் தைப்பூச தினத்திற்கு அடுத்த நாள் என பிப்ரவரி 10,11,12 ஆகிய மூன்று நாட்களுக்கு கட்டணம் இல்ல சாமி தரிசனம் நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திருவிழாவிற்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். பக்தர்களின் வசதிக்காக கட்டணம் இல்லா பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவ., 29ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் தகவல்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு.. ஜனாதிபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்
சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ்!
INS Mahe.. இந்தியாவின் சைலென்ட் ஹண்டர் மும்பையில் களமிறங்கியது!
அதிர வைத்த தேஜஸ் போர் விமான விபத்து.. நடந்த தவறு என்ன.. தீவிரமாக ஆராயும் நிபுணர்கள்
கருப்பு வெள்ளை இந்திப் படங்களின் ஸ்டைலிஷான நாயகன்.. மறக்க முடியாத தர்மேந்திரா
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. மும்பையில் உயிர் பிரிந்தது
சென்னையில்.. தக்காளி விக்கிற விலைக்கு.. சட்னி அரைக்க முடியாது போலயே.. கிலோ ரூ. 80!
ரஜினிகாந்த்தை திருப்திப்படுத்தப் போவது யார்.. தலைவர் 173 எதிர்காலம் என்னாகும்?
{{comments.comment}}