Tiruvannamalai.. திருவண்ணாமலை மலை உச்சியில்.. இந்தாண்டும் நிச்சயம் தீபம் எரியும்: அமைச்சர் சேகர்பாபு

Dec 10, 2024,06:50 PM IST

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் இந்த ஆண்டு நிச்சயம் தீபம் எரியும். அண்மையில் ஏற்பட்ட மண்சரிவால் தீபம் ஏற்றப்படுவது பாதிக்கப்படாது. எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டசபையில் 2ம் நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்றது. முதலில் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.


திருவண்ணாமலை தீபத் திருவிழா குறித்து துணை சபாநாயகர் பிச்சாண்டி சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பதில்:




திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 40 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், பெரும் மழையின் வெள்ளத்தின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதை அனைவரும் அறிவோம். அதனை போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடத்தப்பட்டது.இந்த ஆண்டு மலை உச்சியில் தீபம் எரியும். திருவண்ணாமலை  மலை மீது தீபம் ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்ப மனித சக்தியை பயன்படுத்த உள்ளோம். 


350 கிலோ கொப்பரை திரி 450 கிலோ நெய் சுமக்க தேவையான அளவு மனித சக்தியை பயன்படுத்தி எவ்வித அசம்பாவிதமும், உயிர்சேதமும் இன்றி தீபத்திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகா தீப திருவிழா நடைபெறும். மலை ஏறி சென்ற தீபத்தை காண அனுமதிப்பது தொடர்பாக வல்லுனர் குழு அறிக்கை கிடைத்தவுடன் முதலமைச்சர் உடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். சான்றோர்களால் துவக்கி வைக்கிப்பட்ட இந்த தீப திருவிழா முதல்வர் உத்தரவின் பேரில் கண்டிப்பாக இந்தாண்டும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே, திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் 21ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக ஈடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்