சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அடிப்படையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி நடிகர் சங்க தேர்தலின் போது பிரம்மாண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்தது. அப்போது, விஷால் ஒரு படி மேலே போய் அந்த மண்டபத்தில் தான் எனக்கு திருமணம் என்றார். இதன்படி, நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 2017ம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்று செங்கல் எடுத்து வைத்தனர்.
தென்னிந்தி நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக தியாகராய நகரில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கட்டிடம் கட்டு பணி நடைபெற்று வந்தது. ஐந்து வருடம் கடந்துவிட்ட நிலையில் திடீரென நிதி நெருக்கடி காரணமாக கட்டடப்பணி நிறுத்தப்பட்டது. கட்டிடப்பணி மீண்டும் தொடங்க வேண்டும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் நிதி திரட்டி வந்தனர்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் உதயநிதி ஸ்டாலின் இன்று (15.02.24) அவரது முகாம் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம் நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், விஷால், கார்த்தி மற்றும் கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் காசோலையை வழங்கினார். இதற்கு நடிகர் விஷால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டிவிட் போட்டுள்ளார்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}