டெல்லி: முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா அழகியான ரிங்கி சக்மா புற்றுநோய்க்கு பலியாகியுள்ளார். 2 வருடமாக போராடி வந்த அவரது வாழ்க்கை இன்று முடிவுக்கு வந்துள்ளது. அவருக்கு 28 வயதுதான் ஆகிறது என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்தும் கூட அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2 வருடமாகவே தொடர் சிகிச்சை எடுத்துப் போராடிக் கொண்டிருந்தார் ரிங்கி சக்மா.
கடந்த மாதம்தான் தனது துயரமிகு போராட்டம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருந்தார் ரிங்கி. நான் தனித்துப் போராடிக் கொண்டிருக்ககிறேன். எனது உடல் நிலை குறித்து யாரிடமும் சொல்ல நான் விரும்பியதில்லை. நானே போராடி சரி செய்து கொள்வேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் யாரிடமாவது இதைச் சொல்ல வேண்டும் என்று இப்போது தோன்றுகிறது என்று அவர் கூறியிருந்தார்.
ரிங்கிக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருந்தது. இதற்காக அவர் அறுவைச் சிகிச்சை ஒன்றை அவர் மேற்கொண்டிருந்தார். அவரது நுரையீரலைத் தாக்கிய புற்றுநோய் பின்னர் அவரது மூளை வரை போய் விட்டது. மூளையில் கட்டி உருவாகியிருந்தது தெரிய வந்தது. தனது கண் வரை பாதிப்பு இருப்பதாகவும், இதிலிருந்து மீளும் வாய்ப்பு 30 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் கூறியிருந்தார் ரிங்கி சக்மா.
கீமோதெரபி தொடர்வதாகவும், விரைவில் மூளை அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். தனது சேமிப்பு அனைத்தும் சிகிச்சைக்காக செலவழிந்து விட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
2017ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் பியூட்டி வித் ஏ பர்பஸ் என்ற பட்டத்தை வென்றவர் ரிங்கி சக்மா. அந்தப் போட்டியில் மனுஷி சில்லார் அழகிப் பட்டம் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}