சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். எஸ்ஐஆர் நணிகள் விவகாரத்தில் பாதி கிணறு தாண்டிவிட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் தத்தமது கட்சிப்பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் இந்த கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் திமுக மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துத் தினந்தோறும் மாலை நேரங்களில் நிர்வாகிகளிடம் நிறுவன ரீதியான விவரங்களைக் கேட்டு வருகின்றேன். வரும் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகவிருக்கும் நிலையில், திமுக நிர்வாகிகள் அதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். பொதுமக்கள் பட்டியலில் பெயர் விடுபட்டால் அதனைச் சேர்ப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார்.
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!
{{comments.comment}}