- எம்.எல். பிரபா
ரசத்தில் பலவகை உண்டு. நம் அன்றாட வாழ்வில் உணவில் ரசம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உடல் நலம் சரியில்லாத போதும் ரசம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். சுலபமாக செய்யக்கூடிய பொரித்த ரசத்தை வாங்க நாமும் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு ஐந்து டேபிள் ஸ்பூன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய் வத்தல்- 4 , தக்காளி பழம்-2, தனியா, கடுகு, மிளகு, சீரகம் ஒரு டேபிள் ஸ்பூன். சிறிதளவு பெருங்காயம். தேவையான அளவு உப்பு .கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி.
செய்முறை:

முதலில் துவரம் பருப்பு மூன்று ஸ்பூன் எடுத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாய், மீதி உள்ள துவரம் பருப்பு
மிளகு, தனியா வாணலியில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பிறகு வேகவைத்த பருப்பு தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருள்களை மிக்ஸியில் போடவும். தக்காளி பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனையும் மிக்ஸியில் போடவும். அதில் வேக வைத்த பருப்பையும் சேர்க்கவும். கடைசியாக சீரகத்தை போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.
பருப்புத் தண்ணீரை உப்பை சேர்த்து ஸ்டவ் வில் வைக்கவும். சிறிது நேரம் கொதித்து பொங்கி வரும் போது ஸ்டவ்வை சிம்மில் வைக்கவும். மிக்ஸியில் அரைத்த கலவையை அதில் சேர்க்கவும்.
நன்றாக இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகை போடவும். கடுகு பொரிந்த உடன் பெருங்காயத்தை அதில் போடவும். வறுத்து ரசத்தில் ஊற்றவும். கருவேப்பிலை, கொத்தமல்லி போடவும்.
வாசனை வாசல் வரை செல்லும். மூக்கைத் துளைக்கும் .ஆஹா! ரசம் ரெடி. சிறியவர்கள் கூட எளிதாக செய்யலாம்.
சமையல் தெரியாதவர்கள் கூட முதலில் கற்றுக் கொள்ளும் போது இப்படி எளிதாக செய்ய ஆரம்பிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம். சூடான சாதத்தில் நெய் ஊற்றி பிசைந்து இந்த பொரித்த ரசத்தையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. அஜீரண பிரச்சனை சரியாகிவிடும். மலச்சிக்கலை போக்கும்.
தொட்டுக் கொள்வதற்கு அப்பளமும், வடகமும் இருந்தால் இன்னும் சுவை கூடும் .ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி அன்று இந்த பொரித்த ரசம் செய்து சாப்பிடுவது மிகவும் விசேஷம்.
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)
நல்லதை நினைத்தால்!
அன்பே வா! எந்தன் அருகே வா!
பரமானந்தம்!
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!
Subhalakshmi on her Drawings: ஓவியமும் நானும்!
அவன் அப்படிதான்!
If you obey all the rules, you miss all the fun
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
{{comments.comment}}