Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

Oct 06, 2026,03:27 PM IST

- க. யாஸ்மின்


கடையில் வாங்கும் குலாப் ஜாமூன் மட்டும் சாஃப்ட்டா இருக்கு. வீட்டுல நாம செஞ்சா மட்டும் கல்லு மாதிரி கெட்டியா இருக்கே. அது எப்படி என்று பலரும் அங்கலாய்ப்பதைப் பார்க்கலாம்.


கவலையை விடுங்க பாஸ்.. வீட்டிலேயே மென்மையான, சுவையான குலாப் ஜாமுன் செய்யலாம்.. வாங்க  எப்படின்னு பார்ப்போம்.


மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது 

இனிப்புதாங்க...

அதனால அதை ஆர்வமா செய்யலாம்...


எளிய செய்முறை மற்றும் தேவையான பொருட்கள்:

1. குலாப் ஜாமுன் மிக்ஸ் 

2. பால் – தேவையான அளவு

3. நெய் அல்லது எண்ணெய் – பொரிக்க

4. முந்திரி 

5. திராட்சை

6. பாதம் பருப்பு 


சர்க்கரைப் பாகுக்கு:




1. சர்க்கரை – 2 கப்

2. தண்ணீர் – 2 கப்

3. ஏலக்காய் – 2


செய்முறை:


ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமுன் மிக்ஸை போட்டு, சிறிது சிறிதாக பால் சேர்த்து மென்மையாக விரல்களால் பிசையவும். மாவை 5–10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.


சிறிய உருண்டைகளாக உருட்டுங்கள். வெடிப்பு அல்லது விரிசல் இல்லாமல் உருட்டுவது முக்கியம்.

இது ஒரு வகை. 


மற்றொருவகை 


முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். 

பின்னர் உருட்டிய உருண்டைகளுக்கு நடுவில் விரலால் சிறிது துளையிட்டு  வறுத்த நட்ஸ் வைத்து நன்றாக உருட்டிக்கொள்ளவும். 


கடாயில் எண்ணெய்/நெய்யை மிதமான சூட்டில் காயவைக்கவும். உருண்டைகளைப் போட்டு மிதமான அல்லது குறைந்த தீயில் மெதுவாக பொன்னிறமாக பொரிக்கவும்.


ஒரு பாத்திரத்தில் சர்க்கரை  தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து, (சர்க்கரை எவ்வளவு எடுக்கிறோமோ அதே அளவு தண்ணீர்) சர்க்கரை முழுவதும் கரைந்ததும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். கம்பி பதம் வேண்டாம்.


விரல்களில் ஒட்டும் அளவு சிறிது பிசுபிசுப்பானால் போதும். பின்னர், ஏலக்காய் நசுக்கி அல்லது பொடி செய்து  சேர்க்கவும். பாகு மிகவும் கெட்டியாக இருக்கக்கூடாது. லேசான பாகுதான் ஜாமுனுக்குள் நன்றாக ஊறும்.


பொரித்த ஜாமுன்களை சூடான அல்லது வெதுவெதுப்பான பாகில் போட்டு குறைந்தது 2 மணி நேரம் ஊறவிடவும். பாகு அல்லது உருண்டை ஏதாவது ஒன்று மட்டும் சூடாக இருந்தால் போதும். 


என்ன நண்பர்களே ...!

குலாப் ஜாமூன் ரெடியா 


இனிய மாலைப்பொழுதில் குளிர்ச்சியான தென்றலில்  நிலவினை ரசித்துக்கொண்டே  சுவைப்போம் மென்மையான குலாப் ஜாமூன்...


மீண்டும் சந்திப்போம் அடுத்த special recipe  ல்..


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்