சென்னை: திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஈரோட்டில் இருந்து தனது முதல் கட்ட சூறாவளி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சியை சார்ந்த தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள இக்கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கவில்லை. அதற்கு பதிலாக மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்குவதாக இரு கட்சிகளும் உடன்பாடு செய்து கொண்டுள்ளன.
அந்த நேரத்தில் இது பற்றி விளக்கம் அளித்து கமல்ஹாசன் கூறுகையில், நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இந்திய கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறேன். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு தான் சேர்ந்து இருக்கிறேன். இது எனது பதவிக்கான விஷயம் கிடையாது. நாட்டுக்கான விஷயம் என கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று ஈரோட்டில் இருந்து தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன். திமுக வேட்பாளரை ஆதரித்து, உதய சூரியன் சின்னத்தில் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், வெப்படை, உள்ளிட்ட இடங்களில் இன்று வாக்கு சேகரிக்க இருக்கிறார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}