சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று இக்கட்சி தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற உள்ளது.
நடப்பாண்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமலஹாசன் போட்டியிடவில்லை. மாறாக திமுகவிற்கு ஆதரவளித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அடுத்து 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் வருகிறது. இதற்காக பல்வேறு கட்சியினரும் என்ன மாதிரியான தேர்தல் யுக்திகளை கையாளலாம் என்பது தொடர்பாக தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றனர். இதற்கிடையே நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியின் அடுத்த கட்ட பணிக்கான கட்சி கொடியை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மிக பிரம்மாண்டமாக கட்சி மாநாடும் நடத்த திட்டமிட்டுள்ளார்.
அந்த வரிசையில் மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர் கமலஹாசன் கட்சியின் உட்கட்டமைப்புகளை எப்படி வலுப்படுத்துவது.. இக்கட்சியை அடுத்த கட்டத்துக்கு எப்படி கொண்டு செல்வது ..என்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார். குறிப்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு கட்சியை எப்படி தயார் படுத்துவது என்பது தொடர்பாகவும் விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டம் மநீம தலைவர் கமலஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இதில் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்கை குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}