சென்னை: நடிகர் விஜய் புதிதாக ஆரம்பித்துள்ள கட்சிக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தலைவர் கமலஹாசன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இந்தக் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரிட்டுள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், தொண்டர்கள், என அனைவரும் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் விஜய் தொடங்கிய புதிய கட்சியை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நம்மவர். கமலஹாசன் அவர்கள் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள, நடிகர் விஜய் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுகளும், வரும் 2026ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலத்தில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கியிருக்கிறார் கமல்ஹாசன். அவரது தீவிர ரசிகரும், அவர் மீது நிறைய அன்பு வைத்துள்ளவருமான விஜய் தற்போது கமல் பாணியில் அரசியலில் குதித்திருப்பது இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரு தரப்பும் கை கோர்த்து அரசியல் பாதையில் நடை போடும் வாய்ப்பு வருமா என்ற எதிர்பார்ப்பும் எட்டிப் பார்த்துள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}