சென்னை:தமிழகத்தில் இன்று முதல் 16ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 13 மற்றும் 14ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கி, வெயிலின் தாக்கத்துடன் வெப்ப அலையும் வீசி வருகிறது.மதிய வேலைகளில் வெயில் கொளுத்துகிறது.
இருப்பினும் அவ்வப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நீடித்து வருகிறது. அதேபோல் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 16ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 13 மற்றும் 14ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11 மற்றும் 12 ஆம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
13ஆம் தேதி கனமழை:
நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஆகிய ஆறு மாவட்டங்களில் 13ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
13ஆம் தேதி மிதமான மழை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
14ஆம் தேதி கன மழை:
நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் 14ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.
14ஆம் தேதி மிதமான மழை:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
15 மற்றும் 16 தேதிகளில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று சென்னையில் மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வருகின்ற 13-ம் தேதி வாக்கில் 10 நாட்கள் முன்கூட்டியே துவங்க கூடும் எனவும், கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 4 நாட்களுக்கு முன்கூட்டியே வரும் 27ஆம் தேதி துவங்கக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}