நவீன இந்தியாவை வளர்த்த பெருமை.. நான்கு குஜராத்திகளுக்கே.. அமித்ஷா பேச்சு

May 19, 2023,12:28 PM IST
டெல்லி: நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு நான்கு குஜராத்திகள்தான் மிக முக்கியக் காரணம் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர அவர்கள் என்று அமித் ஷா புகழ்ந்து பேசியுள்ளார்.

டெல்லி குஜராத்தி சமாஜ் அமைப்பின் 125வது ஆண்டு நிறைவுதின விழாவில் கலந்து கொண்டு அமித் ஷா பேசும்போது இப்படிக் கூறினார்.



பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.  மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய், நரேந்திர மோடி ஆகிய நான்கு குஜராத்திகள் இந்தியாவின் நவீன வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள்.

குஜராத் சமுதாயம் இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.  அனைத்து சமுதாயத்தினருடனும் இணைந்து குஜராத்திகள் வாழ்கின்றனர். சமூகத்துக்கு அவர்கள் ஆற்றும் சேவை மிகப் பெரியது.

மகாத்மா காந்தி நாடு விடுதலை அடைய உதவினார். சர்தார் வல்லபாய் படேலால் நாடு ஒன்றிணைந்தது.  நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை மொரார்ஜிக்கு உண்டு. இன்று பிரதமர் நரேந்திர மோடியால்உலகம் முழுவதும் இந்தியா க ண்டாடப்படுகிறது.

குஜராத்திகளின் சாதனை மிகப் பெரியது. அவர்களுக்காக நாடு பெருமைப்படுகிறது. டெல்லியில் வாழும் குஜராத்திகள் தங்களது கலாச்சரத்தை விட்ட விடாமல் நாகரீகத்தை விட்ட வடிாமல்தொடர்ந்து கசடைப்பிடிககன்றனற்.  இதன் மூலம் பிற சமுதாயத்தினருக்கும் முன்னுதாரணமாகவிளங்குகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மோடி பிரதமராக வந்தபோது உலக அளவில் நமது நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இன்று 5வது மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக நாம் உயர்ந்திருக்கிறோம்.

விமானப்படை நடத்திய சர்ஜ்ஜிகல்ஸ்டிரைக் உள்ளிட்டவற்றால் பிரதமர் மோடி தனது தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதியில் யாரும் வாலாட்ட முடியாது என்ற வலுவான செய்தியை உலகுக்குக் கொண்டு சென்றுள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்ட விதத்தை உலகமே பார்த்து அயர்ந்து போனது. 130 கோடி பேர் கொண்ட மிகப் பெரிய நாட்டில் மிக மிக நேர்த்தியாக கொரோனா தடுப்பூசி  திட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

தீவிரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி மிகக் கடுமையாக நடந்து வருகிறார். தீவிரவாதம் அடியோடு அழிக்கப்பட்டுள்ளது.  கடந்த 9 ஆண்டுகளில் ஒரு தீவிரவாதத் தாக்குதல் கூட நாட்டில் நடந்ததில்லை என்று பேசினார் அமித்ஷா.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்