என்னது...இந்தியா பெயரை மாத்தப் போறாங்களா?

Sep 05, 2023,12:24 PM IST
டில்லி : இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18 ம் தேதி துவங்கி, 21 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முடிவை முன்னெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது தொடர்பான தீர்மானத்தை பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற மோடி அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 



இந்த தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷூம் தனது ட்விட்டர் போஸ்டில் உறுதி செய்துள்ளார். அவர் தனது போஸ்டில், ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. அதில், President of Bharat என குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக President of India என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை மாற்ற அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது உண்மை தான் என குறிப்பிட்டுள்ளார்.

ஜி 30 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விருந்தில் கலந்த கொள்ள தனக்கு மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அசாம் முதல்வர் ஹிமதா பிஸ்வா சர்மாவும் இதே தகவலை ட்விட்டரில் பகிர்ந்து, Republic of Bharat - கேட்பதற்கே நன்றாக உள்ளது. நமது நாடு தரமானதாக முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாஜகவிற்கு எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இ-ந்-தி-யா கூட்டணியால் பயம் வந்து விட்டது. அதனால் தான் நாட்டின் பெயரையே மாற்றும் அளவிற்கு சென்றுள்ளது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் மிருத்யுஞ்ஜய் திவாரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்