கோடீஸ்வரர் முகம்மது அல் பயத் மரணம்.. யார்னு தெரியுதா இவரை?

Sep 02, 2023,12:41 PM IST

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் முகம்மது அல் பயத் காலமானார். அவருக்கு வயது 94. இளவரசி டயானாவுடன் கார் விபத்தில் மாண்டு போனாரே டோடி அல் பயத்.. அவரது தந்தைதான் முகம்மது அல் பயத்.


இங்கிலாந்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் முக்கியமானவர் முகம்மது அல் பயத். எகிப்தைப் பூர்வீகமாக கொண்ட இவர் இங்கிலாந்தில் தனது கடினமான உழைப்பால் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். ரியல் எஸ்ட்டேட், கப்பல் வணிகம், கட்டுமானத்துறை என சகல துறைகளிலும் ஆழமாக கால் பதித்தவர்.




இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு, ஐரோப்பாவிலும் இவர் மிகப் பிரபலமான கோடீஸ்வரர் ஆவார். சாதாரண பிஸ்ஸி கூல்டிரிங்ஸ் வியாபாரியாகத்தான் இவரது வாழ்க்கை தொடங்கியது. தனது உழைப்பாலும், சாதுரியத்தாலும் மிகப் பெரிய கோடீஸ்வரராக மாறினார் முகம்மது அல் பயத்.


94 வயதான  முகம்மது அல் பயத், வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக லண்டனில் மரணமடைந்தார். இவரது மகன் டோடி அல் பயத், இளவரசி டயானாவுடன் நெருங்கிப் பழகி வந்தார். இருவரும் பிரான்ஸில் சுற்றுப்பயணம் செய்தபோதுதான் அவர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். மகன் இறந்து 26 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது தந்தையும் காலமாகியுள்ளார்.


எகிப்தின் அலெக்சான்ட்ரியா நகரில் பிறந்தவர் முகம்மது அல் பயத். இவர் என்னதான் இங்கிலாந்தில் குடியேறி, இங்கிலாந்துக்குப் பெருமை தேடிக் கொடுத்தாலும் கூட அந்த நாட்டில் இவர் ஒரு "வந்தேறி"யாகத்தான் பார்க்கப்பட்டார். எத்தனையோ அவமானங்கள் வந்தன. ஆனாலும் அதையும் தாண்டித்தான் இவர் ஜெயித்தார்.


ஹாரோட்ஸ், புல்ஹாம், பாரீஸ் ரிட்ஸ் ஹோட்டல் ஆகியவை இவரது அடையாளங்களாகும்.  இங்கிலாந்து அரசு குடியுரிமை வழங்க மறுத்து பிரான்சுக்குப் போய் விடுமாறு பலமுறை மிரட்டியது. காரணம், பிரான்ஸ் நாடு இவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதை அளித்துக் கெளரவித்த காரணத்தால்.  தனது மகனும், டயானாவும் போன கார் விபத்துக்குள்ளாகவில்லை. அது இங்கிலாந்து ராஜ குடும்பம் செய்த சதியே, அவர்கள்தான் தனது மகனையும், டயானாவையும் கொலை செய்து விட்டதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டி உலகையே அதிர வைத்தவர் முகம்மது அல் பயத்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்