அகமதாபாத்: முகம்மது ஷமி மீண்டும் ஒரு முறை இந்தியாவுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிரடியான பேட்டிங்குக்கு கடிவாளம் போட்டு மட்டுப்படுத்திய அவர் கூடவே 24வது விக்கெட்டையும் வீழ்த்தி இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணிக்கு சூப்பர் பலமாக மாறியுள்ள முகம்மது ஷமி இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவரது புயல் வேகப் பந்து வீச்சில் எதிரணிகள் தட்டுத் தடுமாறியதை கண்டு வருகிறோம்.
இன்றைய ஆஸ்திரேலிய பேட்டிங்கிநன்போதும் முகம்மது ஷமிதான் இந்தியாவுக்கு முதல் விக்கெட்டைப் பெற்றுக் கொடுத்தார். அதி வேகமாக போய்க் கொண்டிருந்த ஆஸ்திரேலிய பேட்டிங்கை அப்படியே மட்டுப்படுத்தியவர் ஷமிதான்.
அதி வேகம் காட்டி வந்த டேவிட் வார்னரை தனது அபாரமான பந்து வீச்சால் வீழ்த்தி தனது முதல் விக்கெட்டை இன்று பெற்றார் முகம்மது ஷமி. இந்தத் தொடரில் அவருக்கு இது 24வது விக்கெட்டாகும். இதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் ஷமி.
இறுதிப் போட்டிக்கு முன்பு வரை ஷமிதான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் இன்று ஆஸ்திரேலியா பவுலிங் செய்தபோது ஆடம் ஸாம்பா 23 விக்கெட் வீழ்த்தி ஷமியை சமன் செய்தார். ஆனால் தற்போது ஷமி மேலே வந்து விட்டார். இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவராக ஷமி உருவெடுத்துள்ளார். அவருக்கு தங்கப் பந்து பரிசு கிடைப்பதும் உறுதியாகி விட்டது.
நடப்புத் தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் ஷமி 7 விக்கெட் வீழ்த்தியதே இந்தத் தொடரில் அதிகபட்ச தனிப்பட்ட சிறப்பான பந்து வீச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}