Wow 7.. விட்டு வெளுத்த முகம்மது ஷமி.. நிலைகுலைந்த நியூசிலாந்து.. என்னா பெர்பார்மன்ஸ்!!

Nov 15, 2023,09:41 PM IST
மும்பை:  கஷ்டப்பட்டு இந்தியா அடித்து நொறுக்கிக் குவித்த டார்கெட்டை ஜஸ்ட் லைக் தட்டிக் கொண்டு போகப் பார்த்த நியூசிலாந்தின் பேட்டிங் வரிசையை பிரித்து மேய்ந்து விட்டார் முகம்மது ஷமி. இந்தியாவுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருதோ.. அப்போதெல்லாம் காப்பாற்றும் ஆபத்பாந்தவன் நான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் முகம்மது ஷமி.

என்னா ஒரு பெர்பார்மன்ஸ்.. என்னா ஒரு துல்லியம்.. என்ன மாதிரியான பிரில்லியன்ஸ்.. Simply awesome.. அப்படின்னு மட்டும்தான் ஷமியின் பந்து வீச்சைப் பற்றி சொல்ல வேண்டியுள்ளது. 7 விக்கெட்களை வீழ்த்தி கலக்கி விட்டார் ஷமி.

நியூசிலாந்து அணியை நம்ப முடியாது.. சத்தம் இல்லாமல் உயிரை எடுக்கும் சயனைட் மாதிரி அவர்களது ஸ்டிராட்டஜி இருக்கும். தொய்வடைவது போல இருக்கும்.. ஆனால் துளிர்த்து வந்து மிரட்டி விடுவார்கள். எனவேதான் இந்தியா 400 ரன்களுக்குள் எடுத்த டார்கெட் குறித்து பலருக்கு அச்சம் இருந்தது. 





நமக்கே இப்படி கவலை இருக்கும்போது இந்திய அணிக்கு இல்லாமல் இருக்குமா..  அவர்களும் மிகவும் சுதாரிப்பாகவே பீல்டிங் மற்றும் பந்து வீச்சைத் திட்டமிட்டனர். ஆனால் அதையும் மீறி நியூசிலாந்து அதிரடி காட்ட முயன்றபோது வந்தார் பாருங்க ஷமி.. அட்டகாசமான அவரது பந்து வீச்சில் நியூசிலாந்து நிலை தடுமாறிப் போனது.

பிக்கப் ஆகி வந்த கான்வேயை முதலில்  தூக்கினார் ஷமி. அடுத்து அபாயகரமான ரச்சின் ரவீந்திராவை காலி செய்தார். இந்த இரு விக்கெட்டுகளை ஷமி தூக்கினாலும் கூட அடுத்து வந்த கனே வில்லியம்சனும், டேரில் மிட்சலும் நின்று விட்டனர். இருவரும் சரமாரியாக ரன் குவிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக மிட்சல் அபாரமாக ஆடி சதமும் போட்டு இந்தியாவை அதிர வைத்து விட்டார்.

இந்த ஜோடியைப் பிரிக்காமல் விட்டால் கதை கந்தல் என்ற நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் மீண்டும் வந்து நியூசிலாந்தின் முதுகெலும்பை முறித்தார் ஷமி. முதலில் வில்லியம்சனை அபாரமாக ஆட்டமிழக்கச் செய்த ஷமி, அடுத்த 2வது பந்தில் டாம் லேதமை டக் அவுட் செய்து இந்தியர்களை உற்சாகத்தில் கொந்தளிக்க வைத்து விட்டார்.

அடுத்து அபாயகரமான முறையில் ஆடிக் கொண்டிருந்த டேரில் மிட்சலை அட்டகாசமாக அவுட் செய்தார் ஷமி. அவர் வீசிய பந்தை தூக்கி அடித்த மிட்சலை, எல்லையில் வைத்து சூப்பராக கேட்ச் செய்து வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா.

கேஷுவலாக இலக்கை எட்டிப் பிடிக்க எத்தனித்துக் கொண்டிருந்த நியூசிலாந்தை தண்ணி குடிக்க வைத்து விட்டார் ஷமி.. அவர் போட்ட பிரேக்கால் நியூசிலாந்தின் சேசிங் நிதானத்திற்கு வந்து விட்டது. நெருக்கடியான நிலையில் தற்போது நியூசிலாந்து ஆடி வருகிறது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆரம்பத்தில் சில போட்டிகளில் ஷமி ஆட வாய்ப்பு தரப்படவில்லை. பென்ச்சில்தான் உட்கார்ந்திருந்தார். ஹர்டிக் பான்ட்யா காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால் அணியில் ஆட வந்தார் ஷமி. வந்தது முதல் ஒவ்வொரு போட்டியிலும் அவர் காட்டும் மாஜிக்தான் இந்தியாவை மிகப் பிரமாதமான இந்த வெற்றி நடைக்கு முக்கியக் காரணம். அதிலும் முக்கியமான போட்டிகளில் எல்லாம் ஷமிதான் இந்தியாவைக் காப்பாற்றியுள்ளார்.

இந்தப் போட்டியிலும் ஷமியின் அருமையான, புத்திசாலித்தனமான பந்து வீச்சு இந்தியாவை வெற்றி பெற வைக்கும் என்று தைரியமாக நம்பலாம்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்