சென்னை: இந்திய நட்டத்திர வேகப்பந்து விச்சாளர் முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 17 ஆவது தொடர் விரைவில் தொடங்க உள்ளது. வரும் மார்ச் மாதம் இறுதியில் இப்போட்டிகள் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகப்கோப்பை தொடரின் போது அசத்தலாக பந்து வீசி அதிரடி காட்டியவர் ஷமி. அப்போது அவர் காயமடைந்த காரணத்தால், அதன்பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களிலிருந்து விலகினார் ஷமி.
தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார் ஷமி. அதற்காக லண்டன் சென்று அவர் சிகிச்சை பெற்றார். சிறப்பு ஊசிகளையும் செலுத்திக்கொண்டார். இருப்பினும், அவர் பூரண குணம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து அவருக்கு விரைவில் கணுக்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முகமது ஷமி நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் தான் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கிப்பட்டது. 33 வயதான முகமது சமி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் ஷமி. கடந்த 2 சீசன்களாக அவர் அசத்தலாக ஆடி வந்தார். 2022 தொடரில் 22 விக்கெட்களை வீழ்த்திய ஷமி, 2023 தொடரில் 23 விக்கெட்களைச் சாய்த்து அதிரடி காட்டினார் என்பது நினைவிருக்கலாம்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}