கொச்சி: மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், கடந்த நாற்பது ஆண்டுகளாக திரையுலகில் ஈட்டிய வருமானம் மற்றும் புத்திசாலித்தனமான முதலீடுகள் மூலம் சுமார் 421 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
இவரது சொத்துக்களில் முதன்மையானது துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான பூர்ஜ் கலிஃபாவின் 29-வது மாடியில் அமைந்துள்ள 35 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு அபார்ட்மெண்ட் ஆகும்.
இது தவிர, துபாயின் ஆர்பி ஹைட்ஸ் பகுதியிலும், கொச்சியில் 9,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட டூப்ளக்ஸ் வீட்டையும் அவர் சொந்தமாக வைத்துள்ளார்.

இயற்கையை ரசிக்கும் விதமாக ஊட்டியில் அவர் வைத்துள்ள பங்களா தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு சொகுசு தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது, அங்கு ஒரு இரவு தங்குவதற்கு 35,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
வாகனங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மோகன்லால், 4 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி உருஸ் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி உள்ளிட்ட பல விலையுயர்ந்த கார்களைத் தனது சேகரிப்பில் வைத்துள்ளார்.
அதேபோல், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடெக் பிலிப் மற்றும் 45 லட்சம் ரூபாய் தொடக்க விலை கொண்ட ரிச்சர்ட் மில் போன்ற உலகத்தரம் வாய்ந்த கைக்கடிகாரங்களையும் அவர் விரும்பி அணிகிறார்.
அவரது வருமானத்தைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படத்திற்கு 8 முதல் 20 கோடி ரூபாய் வரையிலும், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க சுமார் 18 கோடி ரூபாயும் ஊதியமாகப் பெறுகிறார்.
இவை தவிர விஸ்மயாஸ் மேக்ஸ் ஸ்டுடியோ, திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகள் எனப் பல்வேறு தொழில்களில் அவர் செய்துள்ள முதலீடுகள் அவரது பொருளாதார பலத்தை மேலும் அதிகரித்துள்ளன.
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}