டில்லி : இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் 2024 ல் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பலவிதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பிற மாநில எதிர்க்கட்சி எம்.பிக்கள் அறிவிப்புகள் வெளியானபோது எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியபடி இருந்தனர்.
2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதில் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி ஆளும் ஆந்திரா, ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு அதிகமான நிதி, அதிகமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் சாலைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கு வசதியாக ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு நிதி உதவியாக ரூபாய் 15,000 கோடி வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆந்திர மாநிலத்தில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பீகார் மாநிலத்தில் புத்த கயா உள்ளிட்ட நகரங்களில் கோவில் வழித்தடங்களை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் பீகார், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ள நிவாரண நிதியுதவியும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி பீகார், ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களை மேம்படுத்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திராவிற்கு பட்ஜெட்டில் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்புக்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்ட போதும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த முறை தேர்தலில் பாஜக.,விற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் நித்திஷ் குமாரின் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக., மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக.,வின் ஆட்சி மத்தியில் தொடர்வதற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு மிக மிக முக்கியம் இதனை கருத்தில் கொண்டே அந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக, ஆந்திராவில் முதல்வராக பதவியேற்ற கையோடு டில்லி சென்ற சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆந்திராவிற்கு கூடுதல் நிதி வழங்குவது உள்ளிட்ட மூன்று முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. அவர் கேட்டுக் கொண்டபடியே இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகி இருப்பது, எதிர்க்கட்சிகளிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}