சூரத்தைக் கலக்கிய Saree Walkathon.. விதம் விதமான சேலையில் நடந்து வந்த பெண்கள்!

Apr 09, 2023,04:46 PM IST
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் இன்று 15 மாநிலங்களைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட Saree Walkathon எனப்படும் சேலையில் நடைபயணம் நடைபெற்றது. பெண்களின் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த சேலை நடை  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சூரத் மாநகராட்சியும், அந்த நகரின் ஜவுளித்துறையினரும் இணைந்து இந்த சேலை நடைக்கு ஏற்பாடு செய்திரு்நதனர். சூரத்தில் ஜவுளித்தொழில் மிகப் பெரியஅளவில் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் சூரத்திலிருந்து பெருமளவில் ஜவுளிவாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




அத்வான பார்ட்டி பிளாட் என்ற இடத்தில் தொடங்கி  அதே இடத்திற்கு மீண்டும் சேலை நடை வந்து முடிந்தது. கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் தொலைவுக்கு பெண்கள் நடை போட்டு வந்தனர். விதம் விதமான சேலையில் பெண்கள் ஆ டியபடியும், பாடியபடியும் உற்சாகமாக நடந்து வந்தனர்.

சிறுமி முதில் முதிய பெண்கள் வரை பல்வேறு தரப்பு பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.  இந்த சேலை நடை நிகழ்ச்சியில் சிறுமிகளும், பெண்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.  இந்த நடை குறித்து சூரத் மாநகராட்சி ஆணையாளர் ஷாலினி அகர்வால் கூறுகையில், இந்தியா தற்போது ஜி20 அமைப்பின் தலைவராகியுள்ளது. இது நாட்டுக்குப் பெருமையான தருணமாகும். இந்த சேலை நடை நிகழ்ச்சியானது,  இந்தியாவின் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. பெண்கள் தங்களது ஆரோக்கியத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் இது நடைபெற்றது என்றார் அவர்.





இந்த சேலை நடையைத் தொடர்ந்து  சூரத் நகரில் நான்கு நாள் சேலைகள் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விதம் விதமான சேலைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்ப்படவுள்ளன.

இதுதவிர பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு சூரத் மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம்  பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது என்ன மாதிரியான நடவடிக்கைகளை பெண்கள் கையாளலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்