சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செயலி மூலமாக கட்சியில் சேர்ந்துள்ளார்களாம்.
கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர் நோக்கியே தனது இலக்கு என்ற நோக்கில் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது படிப்படியாக ஒவ்வொரு வேலையாக செய்து வருகின்றனர்.
லேட்டஸ்டாக அவர்கள் மேற்கொண்டுள்ள முக்கியப் பணி என்றால் அது உறுப்பினர் சேர்க்கைதான். 2 கோடி பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று விஜய் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். அதில் முதல் உறுப்பினராக விஜய் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து தொண்டர்கள் அதில் இணைந்து வருகின்றனர்.
இதற்காக வாட்ஸ் அப், டெலிகிராம், ட்விட்டர் உள்ளிட்ட வைக்கு தனித்தனியான க்யூ ஆர் குறியீடை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை பதிவு செய்து கொள்ள புதிய செயலியைப் பயன்படுத்தி கட்சியினர் இணைந்து வருகின்றனர். செயலி அறிமுகப்படுத்தப்பட்டபோது பல லட்சம் பேர் ஒரே சமயத்தில் அதில் இணைய ஆர்வம் காட்டியதால் சர்வர் டவுன் ஆனது. தற்போது அது சரி செய்யப்பட்டு தொண்டர்கள் எளிதாக இணைந்து வருகின்றனர்.
இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலி மூலம் தவெக உறுப்பினராக இணைந்துள்ளனராம். நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். இவரை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள். ஒரு நண்பனாக, மகனாக, தந்தையாக, நடிகர் விஜயின் நடிப்பை திரையில் ரசித்து வருவதால் அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். குறிப்பாக நடிகர் விஜயை ஆதரிக்கும் பெண் ரசிகர்கள் மற்றும் குழந்தை ரசிகர்கள் அதிகம்.
தற்போது கமல்ஹாசனும் திமுக அணியில் இணைந்து விட்டார். இதன் மூலம் அவரது தனி அடையாளம் மறைந்து விட்டது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெரிய ஸ்டார்கள் யாரும் அரசியலில் இல்லை. திமுக மட்டுமே வலுவாக இருக்கிறது. எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கக் கூடிய அளவில் விஜய்யின் கட்சி உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}