மார்னி மார்க்கலுக்குப் புது வேலை.. டீம் இந்தியாவில் இணைகிறார்.. கம்பீர் கொடுத்த அசைன்மென்ட்!

Aug 14, 2024,05:31 PM IST

மும்பை:  தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் பந்து வீச்சாளரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சுப் பயிற்சியாளருமான மார்னி மார்க்கல், இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராகிறார்.


தென் ஆப்பிரிக்காவின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் மார்னி மார்க்கல். சிறந்த வேகப் பந்து வீச்சாளர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்பு விளையாடிய ஆல்பி மார்க்கலின் சகோதரர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை அணியில் பந்து வீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டவர். தற்போது அவர் இந்திய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக இணைகிறார்.




இந்த செய்தியை இந்திய கிரிக்கெட் அணியின் செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவில் ஐபிஎல் அணிகளுடனும் இணைந்து செயல்பட்டுள்ளார் மார்னி மார்க்கல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளில் அவர் பந்து வீச்சுப் பயிற்சியாளராக இருந்துள்ளார். கொல்கத்தா அணியில் இருந்தபோது அதன் கேப்டனாக இருந்தவர் கம்பீர் என்பது நினைவிருக்கலாம்.


39 வயதேயாகும் மார்னி மார்க்கல், கம்பீரன் முதல் சாய்ஸ் ஆவார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலும் இருவரும் இணைந்து செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 86 டெஸ்ட் போட்டிகள், 117 ஒரு நாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆடியுள்ளார் மார்னி மார்க்கல். மொத்தம் 544  விக்கெட்களையும் அவர் வீழ்த்தியுள்ளார்.


இந்திய  அணியின் பந்து வீச்சு இலங்கையில் திருப்திகரமாக இல்லை. இதனால் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சை சரி செய்யும் முக்கியப் பணி மார்னி மார்க்கல் முன்பு காத்திருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்