ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

Oct 25, 2025,04:09 PM IST

- ரேணுகா ராயன்


வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில், ஐரோப்பாவின் வட திசையில் அழகான பல குட்டி தீவுகளை தன்னுடன் இணைத்துக்கொண்ட இயற்கை எழிலோடு பசுமை கொஞ்சும் ஒரு தீவு நாடுதான் ஐஸ்லாந்து. சும்மா சொல்லக் கூடாதுங்க, சூப்பரான நாடு. ஒரு பூச்சி பொட்டு கூட கிடையாதாம் இந்த தீவு நாட்டில்.


நீண்ட காலமாகவே இங்கு மக்கள் குடியேற்றம் இல்லை. கிட்டத்தட்ட ஒன்பதாம் நூற்றாண்டில்தான் மக்கள் இந்நாட்டில் குடியேறினர். தீவு மெல்ல மெல்ல நாடாக மாறியது. மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட இந்த நாடு இயற்கையின் வியத்தகு விடயங்களை தன்னகத்தேக்  கொண்டுள்ளது. எரிமலைகளும் பனிப்பாறைகளும் ஏராளமான நீர்வீழ்ச்சிகளும் இந்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அம்சங்கள் ஆகும்.


நீல லகூன் என்ற வெப்ப தடாகம், கருப்பு மணல் கடற்கரை மற்றும் நள்ளிரவு சூரியன் என்று இந்நாட்டின் பெயரை சொன்னவுடன் உலகம் அறியும் அதிசயத்தக்க பெருமைகள், இயற்கை இந்த நாட்டுக்கு அளித்த கொடை ஆகும்.


இந்த நாட்டுக்கு ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கும் நிலையில் முக்கியமான இன்னொரு சிறப்பாக இந்நாட்டில் "கொசு" என்ற ஒரு உயிரினம் இதுவரை இல்லாமல் இருந்தது. ஏன் இப்படி சொல்கிறோம் என்றால் இதுவரை இந்த நாட்டவர், கொசுவைப் பார்த்தது கூட கிடையாது. இதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா.. வேற என்ன குளிர்ச்சிதான்!




குளிர்காலத்தில் 1 சென்டிகிரேட் வரையிலும் கோடை காலங்களில் 13 சென்டி கிரேட் வரையிலும்தான் இங்கு வெப்பம் இருக்கும். இந்தக் குளிரை நம்மாலே கூட தாங்க முடியாது. கொசு போன்ற பூச்சிகளுக்கு இது எப்படி ஒத்துக் கொள்ளும்.. இது கொசுக்களுக்கு வாழ்வதற்கு ஏதுவான சூழல் இல்லை. அதனால்தான் இங்கு கொசு போன்ற பூச்சிகள் இதுவரை கிடையாது. ஆனால் தற்போது உலகளாவிய புவி வெப்ப உயர்வினாலும் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதாலும் பல மாற்றங்களை ஐஸ்லாந்து சந்திக்க ஆரம்பித்துள்ளது. அப்படி நடந்துள்ள ஒரு மாற்றம்தான் அந்த நாட்டு மக்களை அலற வைத்துள்ளது.


அதாவது.. ஐஸ்லாந்தில் கொசு புகுந்து விட்டதாம். வெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே, ஐஸ்லாந்துக்குள் கொசு புகுந்து இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 2, 3 கொசுக்களை இதுவரை கண்டுபிடித்துள்ளனராம்.


உலக அளவில் மொத்தம் 3500 வகை கொசுக்கள் உள்ளன. இதில், கியுலுசெட்டா அணுலெட்டா என்ற வகை கொசு  ஐஸ்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை கொசு நார்வே, பின்லாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளைப் பூர்வீமாகக் கொண்டவையாகும்.


இதில் என்ன வேடிக்கை தெரியுமா.. கடந்த 1980 இல் விமானம் மூலம் ஐஸ்லாந்துக்குள் ஒரு கொசு நுழைந்து விட்டது. அந்தக் கொசுவைப் பிடித்து, அதை அந்நாட்டின் இயற்கை அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைத்திருக்கிறார்கள். இப்போது வரை அதைக் காண முடியும்.  அதன் பிறகு ஒரு கொசு கூட ஐஸ்லாந்துக்குள் புகுந்ததில்லை. இதை பெருமையாக அந்த நாட்டவர் சொல்லி காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருந்தனர்.. ஆனால்  இப்போதோ அந்தக் காலருக்குள் புதுக் கொசு புகுந்து விட்டது!


இந்த புதிய பகைவனை ஐஸ்லாந்து எப்படியாக எதிர் கொள்ளப்போகிறது என்பது ஆர்வமான எதிர்பார்ப்பாக உள்ளது. எல்லா உயிரினமும் கால சூழ்நிலைக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றது. இதில், கொசுவும் கூட பிரமிக்கத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. வெப்பநாடுகள் மட்டுமே அதன் ராஜ்ஜியமாக இருந்து வந்த நிலையில் குளிர் பிரதேசங்களும் தனது ஆளுகைக்கு உட்பட்டதே என்று அவை நிரூபிக்க தொடங்கியுள்ளன. எஞ்சி இருப்பது மனிதர்கள் இல்லாத அண்டார்டிகா கண்டம் மட்டுமே...‌ யாருக்கு தெரியும் சுற்றுலாவுக்கு அங்கேயும் கொசுக்கூட்டம் போய் வர வாய்ப்பு இருக்கிறது... கடிச்சாதானே நமக்கும் தெரியும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்