ஜபல்பூர்: மனைவியுடன் இயற்கைக்குப் புறம்பான வகையில் உறவு வைத்துக் கொண்டால் அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.
இந்த வகையான உறவு வைத்துக் கொண்டதற்காக மனைவி கொடுத்த புகாரின் பேரில், கணவர் மீது தொடரப்பட்ட வழக்கையும் ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது. இருவரும் கணவன் மனைவி. அவர்களுக்குள் நடக்கும் உறவை சட்டவிரோதமானது என்று கருத முடியாது. எனவே கணவர் எந்த மாதிரியான உறவை வைத்துக் கொண்டாலும் அதை பலாத்காரமாக கருத முடியாது என்றும் ஹைகோர்ட் கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபரின் மனைவி போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் கணவர் தன்னுடன் இயற்கைக்குப் புறம்பான முறையில் உறவு வைத்துக் கொள்வதாக கூறியிருந்தார். இதன் பேரில் அந்தக் கணவர் மீது போலீஸார் பலாத்கார வழக்கைப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து கணவர் ஹைகோர்ட்டை அணுகினார். அதை விசாரித்த நீதிபதி ஜி.எல். அலுவாலியா அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

இந்தியன் பீனல் கோட் 377ன் கீழ் இந்த இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்குள் நடைபெறும் உறவு சட்டத்திற்கு உட்பட்டது. அது எந்த வகையான உறவாக இருந்தாலும் அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது. எனவே கணவர் மீது தொடரப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்கிறோம். திருமண உறவில் பலாத்காரம் என்பது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}