சென்னை: கிளாம்பாக்கம் -கோயம்பேடு மற்றும் கோயம்பேடு - கூடுவாஞ்சேரி பஸ்களின் எண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம் சென்னையின் மையப் பகுதியான பிராட்வேயில் ஒரு காலத்தில் இயங்கி வந்தது. ஆனால் அந்த இடம் மிகவும் நெரிசலாகி விட்டதால், அந்தப் பஸ் நிலையத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினர். மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால் இந்த பேருந்து நிலையப் பகுதியும் மக்கள் நெருக்கம் மற்றும் அதிகரிப்பு காரணமாக நெரிசலாகியது. இதையடுத்து இந்தப் பேருந்து நிலையத்தை மாற்றி கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்துக்கு தற்போது மாற்றியுள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சிட்டியிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் அதிக அளவிலான மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அப்படி இயக்கப்படும் 2 பேருந்துகளின் தடம் எண் தற்போது மாற்றப்பட்டுள்ளது. பஸ் நம்பர் மட்டுமே மாறியுள்ளது, மற்றபடி அதே ரூட்டில்தான் பஸ்கள் இயக்கப்படும்.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநகர் போக்குவரத்து கழகம் பொதுமக்களின் நலன் கருதி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி வழக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒவ்வொரு தடம் என் வழங்கி பயணிகள் எளிதாக பயணம் செய்ய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்ற தடம் எண் 104சி கட் பேருந்து தடம் எண் 104 சி என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண் 104சி பேருந்து தடம் எண் 104 சி எக்ஸ் என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயங்கும் என மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}