சென்னை: சென்னை மேற்கு தாம்பரத்திலிருந்து புதிய சிற்றுந்து சேவையை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.
சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் புதிய புதிய பஸ் சேவைகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தொடங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக மேற்கு தாம்பரத்தில் ஒரு சிற்றுந்து சேவை தொடங்கப்படுகிறது.

இது சுற்றுப் பேருந்து சேவையாகும். அதாவது மேற்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் மேற்கு தாம்பரத்திற்கே இந்த பஸ் வந்து சேரும். S55W என்ற இந்த சிற்றுந்து), மேற்கு தாம்பரத்திலிருந்து கிளம்பி, பெருங்களத்தூர், எஸ்.எஸ்.எம் நகர், கேம்ப் ரோடு, கிழக்கு தாம்பரம் வழியாக மீண்டும் மேற்கு தாம்பரத்திற்கு வந்து சேரும்.
காலை 5.15 மணிக்கு முதல் பேருந்து இயக்கப்படும். அதைத் தொடர்ந்து 7.40, 10.25, 1.10, 3.45 மற்றும் மாலை 6.25 ஆகிய நேரங்களில் இந்தப் பேருந்து இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}