சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வாங்கப்பட்டுள்ள 100 தாழ்தளப் பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளும் எளிதாக சிட்டி பஸ்ஸில் ஏறி இறங்குவதற்கு வசதியாக தாழ்தளப் பேருந்துகள் சென்னை பெருநகர போக்குரவத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பேருந்துகளுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், மூதாட்டிகள், கர்ப்பிணிகள் ஏறி இறங்குவதற்கு இது வசதியாக இருந்தது. ஆனால் 2018ம் ஆண்டுடன் இந்தப் பேருந்துகளை நிறுத்தி விட்டனர்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தாழ்தளப் பேருந்துகளை மீண்டும் இயக்க கோர்ட் உத்தரவிட்டது. இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும் கூட மக்களின் வசதிக்காக இதை மீண்டும் கொண்டு வர தமிழ்நாடு அரசும் முடிவெடுத்தது. புதிதாக தாழ்தளப் பேருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தற்போது 100 பேருந்துகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 88 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டவை. 12 புதுப்பிக்கப்பட்டவை ஆகும்.
இந்தப் பேருந்தின் படிக்கட்டுக்கள் தாழ்வாக இருக்கும். அதாவது தரையிலிருந்து சிறிது உயரத்திலேயே இவை இருக்கும். இதனால் பயணிகள் ஏறுவது சுலபமாக இருக்கும். மேலும் சக்கர நாற்காலியுடன் வருவோர் இந்தப் படிக்கட்டிலேயே ஏறி உள்ளே செல்லவும் முடியும். அதாவது மெட்ரோ ரயில்களில் இருப்பது போல சக்கர நாற்காலியுடன் வருவோர் பயணிக்க தனி இட வசதியும் இந்தப் பேருந்தில் உள்ளது. பேருந்தில் மொத்தம் 35 இருக்கை வசதி உள்ளது. அதேசமயம், 70 பேர் வரை பஸ்சில் பயணிக்க முடியும்.
இதற்கு முன்பு தாம்பரம் - பிராட்வே, காஞ்சிபுரம் -சைதாப்பேட்டை, கோயம்பேடு - செங்குன்றம் மார்க்கத்தில் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது இயக்கப்படவுள்ள மார்க்கங்கள் விரைவில் அறிவிக்கப்படும். படிப்படியாக பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}